கிங் ஆஃப் கோதா: ஐஸ்வர்யா லக்ஷ்மி கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்:
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. கேங்க்ஸ்டர் கதைக் களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லஷ்மி கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ரித்திகா சிங், செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது பகுதி டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளதாக நடிகை ஐஸ்வர்ய லஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண