‘கே ஜி எஃப் சேப்டர் 2’ திரைப்பட விமர்சனம் | KGF Chapter 2 Movie Review

0
KGF Chapter 2 Movie Review and Rating
KGF Chapter 2 Movie Review and Rating

‘கே ஜி எஃப் சேப்டர் 2’ திரைப்பட விமர்சனம் | KGF Chapter 2 Movie Review

படக்குழு:

நடிகர்கள்: யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்.

இசை: ரவி பாஸ்ரர்

ஒளிப்பதிவு: புவன் கவுடா

எடிட்டிங்: லிஜ்வால் குல்கர்னி

தயாரிப்பு: ஹோம்பலே ஃபிலிம்ஸ்

இயக்கம்: பிரஷாந்த் நீல்.

KGF Chapter 2 Movie Review and Rating
KGF Chapter 2 Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

KGF முதல் பாகத்தில் KGFஐ கைப்பற்றிய நாயகன் அதை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். பிறகென்ன அதை கைப்பற்ற துடிக்கும் கும்பல், ஹீரோவை அழிக்க நினைக்கும் கும்பல் என வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இறுதியாக எல்லாவற்றையும் முறியடித்து வெற்றி கண்டாரா? என்பதே கதைச்சுருக்கம்.

KGF Chapter 2 Movie Review and Rating
KGF Chapter 2 Movie Review and Rating

FC விமர்சனம்:

கன்னட சினிமாவின் போக்கையே மாற்றி பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் KGF, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகம் போல் ரசிகர்களை கவர்ந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை இப்படத்தில் நடிப்பு என்பதை கடந்து ஆக்ஷன் காட்சிகளில் அதிகமாக மெனக் கெட்டுள்ளார் யாஷ். ஸ்டைலிஷ், மாஸ் சீன்கள் என படமுழுக்க குறையில்லாமல் செய்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

டெக்னிக்கல் டீம்தான் படத்திற்கான உயிரோட்டமே, ஹாலிவுட் தரத்தில் இப்படம் இருக்க புவன் கவுடாவின் ஒளிப்பதிவு, கலை இயக்குனரின் மிரட்டும் செட் வொர்க், விறுவிறுப்பான எடிட்டிங், அதற்கேற்ற பின்னணி இசை, பரபரக்கும் ஆக்ஷன் காட்சிகள், சவுண்ட் டிசைன் என அனைத்துமே இப்படத்தில் மிக நிறைவாக வந்துள்ளது. ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு இவர்களின் துணையுடன் உலகத்தரத்தில் ஒரு படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிரஷாந்த் நீல். 

KGF Chapter 2 Movie Review and Rating
KGF Chapter 2 Movie Review and Rating

படத்தில் குறையாக தெரிவது முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளாலும், பில்டப் காட்சிகளாலும் படம் நகர்வதால் ஒருவித சலிப்பும், போர் அடிப்பது போன்றும் தோன்றுகிறது. மேலும் லாஜிக் என்பது மருந்தளவிற்கு கூட இல்லை என்பது முதல் பாகத்திலே தெரிந்திருக்கும், இதிலும் அந்தளவு உள்ளது. வில்லன் சஞ்சய் தத்தின் கதாப்பாத்திரம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம். இறுதியாக படம் எப்படி என்றால்? முழுக்க முழுக்க சண்டை, பஞ்ச் வசனங்கள் தான், இருப்பினும் மேக்கிங்கிற்காக ஒருமுறை தியேட்டரில் (மட்டுமே) பார்க்கலாம். மற்றபடி ஓகே ரகம்தான்…

  KGF Chapter 2 Movie FC Rating: 3 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE