தேசிய விருது பெற்ற நடிகையான கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் தனது சம்பளத்தை குறைத்து கொள்வதாக கூறியுள்ளார்.


கொரோனா பாதிப்பால் சினிமா தொழில் மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது படப்பிடிப்பு எப்போது? எடுத்த படத்தை எப்போது வெளியிடுவது? என பலவகையில் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். இதற்காக நடிகர்கள், டெக்னீஷியன்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது, வழக்கம்போல் பெரிய நட்சத்திரங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட சில நடிகர்கள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது கீர்த்தி சுரேஷும் தனது சம்பளத்தில் 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்வதாக கூறியுள்ளார்.


அவர் கூறியதாவது, “நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என எனது தந்தை தயாரிப்பாளர் என்ற முறையில் கருத்து தெரிவித்தார். ஒரு நடிகையாக அதை நான் வரவேற்கிறேன். நான் நடிக்கும் படங்களுக்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து 20 முதல் 30 சதவீதம் குறைத்து கொள்வேன். நான் மட்டுமல்ல சினிமாவில் உள்ள அனைவரும் இதை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 -ஆம் தேதி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...