பிரபாஸ் படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

0
Keerthy Suresh Joins Prabhas's Adipurush

பாகுபலி படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார். முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ராமாயணத்தின் ஒருபகுதியை கதையாக கொண்டு உருவாவதாக கூறப்படுகிறது.

Keerthy Suresh Joins Prabhas's Adipurush
Keerthy Suresh Joins Prabhas’s Adipurush

ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் மற்றும் ராவணனாக பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலிகான் நடிக்கிறார். ராமாயண கதைப்படி மற்றொரு முக்கிய பாத்திரமான சீதை பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. சமீபத்திய தகவலின்படி நடிகை கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...