காதலியை கரம் பிடிக்கும் நடிகர் கவின்! திருமண தேதி இதோ:
சின்னத்திரை சீரியல்கள், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, பிறகு சினிமாவில் கதாநாயகனாக வலம்வருபவர் நடிகர் கவின். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ‘டா டா’ திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


இப்படத்தின் வெற்றி கவினுக்கு புதிய வாய்ப்புகள் அதிகமாக குவிய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது தனது திருமண வாழ்க்கைக்கு தயாராகியுள்ளார் கவின், அதன்படி தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை தான் கவின் திருமணம் செய்யவுள்ளார். வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண