OTT தளத்தில் வெளியாகும் காட்டேரி! யாமிருக்க பயமே இயக்குனரின் அடுத்த படம்…

0
Katteri Movie Direct Release on OTT?

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான யாமிருக்க பயமே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் டீகே. முதல் படத்திலே பெரிய வெற்றி, படத்தில் ஹாரரும் அதைத்தாண்டிய காமெடியும் நிரம்பியிருக்க ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Katteri Movie Direct Release on OTT?
Katteri Movie Poster

ரசிகர்களை சூடேற்றும் நடிகை அமலா பால் லேட்டஸ்ட் படங்கள்

இப்படத்தைத் தொடர்ந்து ஜீவா, காஜல் அகர்வால் நடிப்பில் கவலை வேண்டாம் படத்தை இயக்கினார். இப்படம் தோல்வியை சந்தித்தது, அதனால் மீண்டும் ஹாரர் காமெடியை கையிலெடுக்க முடிவெடுத்து ஆரமிக்கப்பட்ட படம்தான் ‘காட்டேரி’. வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், ஆத்மிகா, சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் நீண்ட மாதங்களாக காத்திருப்பில் கிடக்க, தற்போது OTT தளத்தின் மூலம் இப்படத்தை வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். டேனி, காக்டெயில் படங்களை தொடர்ந்து ஜீ5 தளம் இப்படத்தை வெளியிவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மருத்துவமனையில் அனுமதி!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…