என்னை பிரதிபலிக்கிறார் நயன்தாரா! பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்

0
Katrina Kaif talks about Nayanthara

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப், நயன்தாராவை பார்த்தால் என்னை கண்ணாடியில் பார்ப்பது போலவே இருக்கிறது என கூறியுள்ளார்.

Katrina Kaif talks about Nayanthara
Saina, Nayanthara & Katrina Kaif at Kay Beauty Ad

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

சென்ற ஆண்டு கே பியூட்டி(Kay Beauty) என்கிற அழகு சாதன பிராண்ட் ஒன்றை வெளியிட்டார் கத்ரீனா, அதன் விளம்பரத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்தனர். அப்போது ஏற்பட்ட நட்பின் வெளிப்பாடாக தற்போதைய பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து கத்ரீனா கூறியுள்ளதாவது, ” நயன்தாரா அழகானவர் மட்டுமின்றி வலிமையானவரும் கூட, அவர் வாழ்வில் பல போராட்டங்களை கடந்து போராளியாக வாழ்ந்துள்ளார். தனது பணியில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரிகிறது. அதில் அவர் உறுதியாகவும் இருக்கிறார். அது என்னை பிரதிபலிப்பது போலவே இருந்தது. அதனால் நயந்தாரா செட்டில் இருக்கும்போது நான் எப்போதும் என்னுடைய டீமிடம் நான், ‘என்னையே கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கிறது’ என நயன்தாரா பற்றி சொல்வேன்” என கத்ரீனா மனம் நெகிழ்ந்து கூறியுள்ளார். முன்னணி நடிகையான கத்ரீனா, நயன்தாராவை பற்றி இப்படி புகழ்ந்திருப்பது நயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

வீடியோ:

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...