‘லால் சலாம்’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் கபில் தேவ்: லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் லால் சலாம். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார்.
கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மொய்தீன் பாய் என்கிற கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் தற்போது மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் ரஜினிகாந்துடன், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். இதுக்குறித்த புகைப்படத்தை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “இந்தியாவிற்கு முதல்முறையாக உலக கோப்பை வென்று பெருமைப்படுத்தியவர் கபில் தேவ். மிகவும் மரியாதைக்குரிய, அற்புதமான மனிதரான அவருடன் இணைந்து பணியாற்றுவது பெருமையான விஷயம்” என கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…