‘கங்குவா’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் லீக்: சூர்யா – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் & UV கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்து வருகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்காணல் காட்டுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கங்குவா படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…


உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…