‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

0
Kangana Ranaut blasts Bollywood after Sushant Singh Rajput's death

பாலிவுட் திரையுலகின் வளர்ந்து வந்த நட்சத்திரமான சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று முன்தினம் மும்பை பந்த்ரா பகுதியில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Kangana Ranaut blasts Bollywood after Sushant Singh Rajput's death
Sushant Singh Rajput

மகேந்திர சிங் தோனியின் பயோபிக்கின் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் பெற்றார். இவரின் தற்கொலை தற்போது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது இறப்பு குறித்து பல்வேறு கண்டனங்களையும், வருத்தங்களையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் கங்கனா ரனாவத் இதுக்குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “சுஷாந்த் இறப்பு நம்மை அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது, மனவலிமை இல்லை என பலரும் புதிய காரணம் கூறி வருகின்றனர். ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் பெற்றவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். அவர் என்ஜினியரிங் நுழைவுத் தேர்வில் ரேங்க் வாங்கியவர். அவர் மைண்ட் எப்படி வீக்காக இருக்க முடியும். சுஷாந்தின் கடைசி பதிவுகளை பார்த்தல் உங்களுக்கு தெரியும், தன் படங்களை பார்க்குமாறு மக்களை கெஞ்சியுள்ளார். எனக்கு காட்ஃபாதர் யாரும் இல்லை. அதனால் தயவு செய்து என் படங்களை பாருங்கள். இல்லை என்றால் என்னை இங்கிருந்து அனுப்பி விடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சுஷாந்த் சிங் ராஜ்புட். பேட்டிகளில் கூட இந்த துறை ஏன் என்னை தன்னில் ஒருவன் ஆக்கக் கூடாது என்று கேட்டுள்ளார்.

Kangana Ranaut blasts Bollywood after Sushant Singh Rajput's death
Kangana Ranaut

சுஷாந்த் நடித்த முதல் படம் துவங்கி MS தோனி, கேதர்நாத், சிச்சோரேவுக்காக அவருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மாறாக மோசமான படமான ‘கல்லி பாய்’க்கு அனைத்து விருதுகளும் கிடைத்தது. திறமைசாலிக்கான உரிய அங்கீகாரம் இங்கு வழங்கப்பட வில்லை, எங்களுக்கு உங்களிடம் இருந்து எதுவும் தேவையில்லை. உங்களின் படங்கள் தேவையில்லை. ஆனால் நாங்கள் நடிக்கும் படங்களை ஏன் அங்கீகரிப்பது இல்லை. நான் இயக்கிய படத்தை சூப்பர் ஹிட்டாகியும் பிளாப் என்றீர்கள்? என் மீது ஏன் ஆறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது? என்னை ஏன் சிறைக்கு அனுப்பத் துடிக்கிறீர்கள்?” என ஆவேசத்துடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வீடியோ:

 

  

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 பாலிவுட்டில் நடிகைகள் படவாய்ப்புகளை குவிப்பது இப்படிதான் – தேஜஸ்வி பரபரப்பு குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…