கமல்ஹாசன் படத்தில் இணையும் பிரபலங்கள்! ‘KH234’ அப்டேட்:
இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்து H.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்கவுள்ளார் கமல்.
ரெட் ஜெயன்ட் மற்றும் ராஜ் கமல் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிக்கவுள்ள பிரபலங்கள் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.


அதன்படி, ‘KH234’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தில் கமல்ஹாசனுடன், ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். மேலும், த்ரிஷா இப்படத்தின் கதாநாயகியாக ஒப்படந்தமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண