கமல்ஹாசன் பாராட்டை பெற்ற நடிகர்! வைரல் செய்திகள்

0
Kamal Haasan praises Ashwin Kumar

தமிழ் சினிமா மட்டுமில்லை இந்திய சினிமாவிலும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கான அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு பலவருட சினிமா அனுபவம், சாதனைகளுக்கு சொந்தக்காரார் கமல்.

Kamal Haasan praises Ashwin Kumar

இது ஒருபுறம் இருக்க, துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் நடிகர் அஸ்வின் குமார், இவர் சமீபத்தில் கமல்ஹாசன் போலவே தோற்றத்துடன் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு டிரெட்மில்லில் நின்றபடி நடனமாடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. கமல் ரசிகர்கள் துவங்கி பலரும் அப்படியே கமல்ஹாசன் போல் உள்ளது பாராட்டி தள்ள, இந்த வீடியோ கமல்ஹாசன் பார்வைக்கும் சென்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த கமல் கூறியுள்ளதாவது, “நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!” என தனது டுவிட்டரில் அஸ்வினை பாராட்டியுள்ளார். 

Twitter Feed:

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

 

👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...