‘Project K’ பட ப்ரோமொஷனில் கமல்ஹாசன், பிரபாஸ்! வைரல் ஸ்டில்:
தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில், ‘மகாநதி’ படத்தை இயக்கிய நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘Project K’. வைஜெயந்தி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கவுள்ளார். இவர்களுடன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வீடியோ இன்று வெளியாகவுள்ள நிலையில், மொத்த படக்குழுவும் ப்ரோமொஷனுக்காக அமெரிக்கா சென்றுள்ளது. இதைத் தொடர்ந்து கமல்ஹாசன், பிரபாஸ், இயக்குனர் நாக் அஷ்வின் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கிடையில் நேற்று வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோசமான டிசைனில் இருந்ததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண