‘இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள்’ கமல்ஹாசன் டுவீட்!

0
Kamal Haasan Latest Tweet

பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்தால் மாநிலம் முழுவதும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்கிற பாஜக வின் வாக்குறுதி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டால் தமிழக முழுவதும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என கூறியிருந்தார். இப்படி தேர்தலுக்கு நோயை கையிலெடுத்திருக்கும் இவர்களின் போக்கு குறித்து கமல்ஹாசன்  “நாங்களே வந்தால் தடுப்பூசி என்கிறார் இவர். எங்களோடு வந்தால் தடுப்பூசி என்கிறார் அவர். இல்லாத ஊசிக்குப் பொல்லாத வாக்குறுதிகள். ஐயா ஆட்சியாளர்களே…  தடுப்பூசி என்பது உயிர் காக்கும் மருந்து. அள்ளித் தெளிக்கும் வாக்குறுதியல்ல. மக்களின் ஏழ்மையுடன் விளையாடிப் பழகிவிட்ட நீங்கள், இன்று அவர்கள் உயிருடனும் விளையாடத் துணிந்தால், உங்கள் அரசியல் ஆயுள் மக்களால் தீர்மானிக்கப்படும்” என விமர்சனம் செய்துள்ளார்.

Kamal Haasan Latest Tweet
Kamal Haasan Latest Tweet

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…