‘இந்தியன் 2’ & ‘தக் லைஃப்’ படங்கள் குறித்து கமல் கொடுத்த அப்டேட்

0

‘இந்தியன் 2’ & ‘தக் லைஃப்’ படங்கள் குறித்து கமல் கொடுத்த அப்டேட்:

‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, இந்தியன் 3, தக் லைஃப், கல்கி 2898 ஏடி ஆகிய படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றது. ஆனால் இந்த படங்கள் கறித்து பெரிதாக அப்டேட்டுகள் வெளியாகாமல் இருந்த நிலையில், இவற்றின் நிலை என்ன, எப்போது வெளியாகும் என்பது குறித்து, கமல் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறினார்.

Kamal Haasan Latest Speech about Indian 2 & Thug Life
Kamal Haasan Latest Speech about Indian 2 & Thug Life

அவர் கூறியதாவது, “இந்தியன் 2 & 3 படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் படம் வெளியாகும் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து ‘Thug Life’ படத்தின் படப்பிடிப்பு நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பிறகு துவன்குமேனவும் கூறியுள்ளார். மேலும், பிரபாஸ், அமிதாப்ச்சன், தீபிகா படுகோன் நடித்துள்ள கல்கி 2898 ஏடி படத்தில் கமல் வில்லனாக நடித்திருப்பதாக கூறப்பட்டுவரும் நிலையில், அப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருப்பதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

யாஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் கதாநாயகிகள் இவர்களா? படக்குழு விளக்கம்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0