ஒரு காலத்தில் தமிழ் ரசிகர்களை மிரளவைத்த வில்லன்களில் ஒருவர் நடிகர் பொன்னம்பலம். பெரும்பாலான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் பொருளாதார ரீதியில் அவர்கள் இடத்தை தொடவில்லை என்று சமீபத்திய நிகழ்வு பிரதிபலித்துள்ளது.


பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிகிச்சைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் உதவி செய்து வருகிறார். மேலும், அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தும் வருகிறார். கூடுதலாக இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டுள்ளார். தனக்கென்ன என்று இருக்காமல் தனது சக நடிகன் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் பொது உதவிக்கரம் நீட்டிய கமல்ஹாசன் அவர்களுக்கு மனதார பாராட்டுக்கள்.
வீடியோ:
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவிய வரலட்சுமி சரத்குமார்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...