கலைஞர் மகளிர் உரிமைத் தொகை – தொடங்கி வைத்தார் முதல்வர்:
தமிழ்நாடு அரசு பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனவும், இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனவும் பெயரிட்டது. இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் 35,923 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் உதவியுடன் மகளிரிடம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் அவரே விண்ணப்பங்களை பதிவும் செய்தார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண