தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லுவை வருகிற அக்டோபர் 30ஆம் தேதி மும்பையில் நெருங்கிய குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இண்டீரியர் டிசைனர் துறையில் தொழிலதிபராக இருக்கிறார் கவுதம். இவர்களது திருமணம் மும்பையில் இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற இருப்பதாகவும், குடும்பத்தினர் மட்டும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், திருமணம் முடிந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் எனவும் கூறியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’, சிரஞ்சீவியுடன் ‘ஆச்சார்யா’ உள்ளிட்ட படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


பிக்பாஸ் சீசன் 4-ன் இரண்டாம் நாள் ஹைலைட்ஸ்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...