காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்

0
KaathuVaakula Rendu Kadhal Movie Review and Rating
KaathuVaakula Rendu Kadhal Movie Review and Rating

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு, ரெடின் கிங்க்ஸ்லி மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: SR கதிர், விஜய் கார்த்திக் கண்ணன்

எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்

தயாரிப்பு: செவன் ஸ்க்ரீன் , ரவுடி பிக்சர்ஸ்

இயக்கம்: விக்னேஷ் சிவன். 

Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills
Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills

கதைச்சுருக்கம்:

சின்ன வயதிலிருந்தே தனக்கு கொஞ்சமும் லக் என்பதே இல்லை என வருத்தப்படும் நாயகன் விஜய் சேதுபதிக்கு, ஒரே நேரத்தில் இரண்டு காதலிகள் கிடைக்க, பிறகென்ன இருவரையும் எப்படி சமாளித்தார்? இறுதியாக எந்த காதல் வெற்றி பெற்றது? என்பதே கதைச்சுருக்கம்.

Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills
Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills

FC விமர்சனம்:

எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்துவிட வேண்டுமென்கிற வேட்கையில் நாயகனாக விஜய் சேதுபதியும், இயக்குனராக விக்னேஷ் சிவனும் இருந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் வெளியாக்கியிருகிற திரைப்படம்தான் இந்த காத்துவாக்குல ரெண்டு காதல். படம் எப்படி இருக்கு வாருங்கள் விமர்சனத்திற்குள் செல்வோம்! நடிகர்களை பொறுத்தவரை விஜய் சேதுபதி அசால்ட்டாக நடித்து கவர்ந்துள்ளார், குறிப்பாக படத்தின் இடைவேளையில் வரும் ரெண்டு காதலிகளிடம் மாறி மாறி பேசும் அந்த காட்சி உண்மையில் மிகவும் ரசிக்கும்படி வந்துள்ளது. நாயகிகள் நயன்தாரா, சமந்தா இருவரும் காமெடி, எமோஷனல் என போட்டி போட்டு நடித்துள்ளனர். என்ன! நயன்தாராதான் உடல் இளைத்து தோற்றமளிப்பது சற்று உறுத்தலாக அமைந்துள்ளது. அந்த கொழுகொழு கன்னத்துடன் கவர்ந்த நயன்தாராவை மிஸ் செய்வது போல் உணர்வு. அந்த வகையில் சமந்தா மொத்தமாக கவர்ந்து செல்கிறார்.

Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills
Kaathuvaakula Rendu Kaadhal Movie HD Exclusive Stills

ரெடின் கிங்ஸ்லி, மாறனுடைய காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. இன்னும் நிறைய வாய்புகள் கொடுத்திருக்கலாம் காட்சிகளில்… படத்தின் மிகப்பெரிய பலம் அனிருத்தின் இசை, பாடல்களும் சரி, பின்னணி இசையும் மிரட்டலாக கொடுத்துள்ளார். அதேபோல் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. படத்தின் குறியாக தெரிவது படத்தின் நீளம், 2.45 மணி நேரம் ஓடும் இப்படத்தில் கதையாக பெரிய விஷயம் இல்லை. வெறும் காட்சிகளை கொண்டு நகரும் இப்படத்தை இன்னும் கிரிஸ்பாக கட் செய்திருந்தால் நான்றாக இருந்திருக்கும். 

அதேபோல் படத்தின் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், மீதி போராக தான் செல்கிறது, சலிப்பை தவிர்க்க முடியவில்லை. முன்பு சொன்னது போல காமெடி காட்சிகள் பல இடங்களில் ரசிக்க வைத்திருகிறது என்றாலும் மொத்த படமாக பார்த்தால் பொறுமையை சோதிக்கும் வகையாக தான் வந்துள்ளது. இறுதியாக படம் எப்படி? என்று கேட்டால், சுவாரஸ்யம் இல்லாத காட்சிகளை குறைத்திருந்தால் இது இன்னொரு ‘நானும் ரவுடிதான்’ போன்று வந்திருக்கும். மற்றபடி பொழுதுபோக்கிற்காக ஒரு முறை பார்க்கும் படியான சுமார் ரகம்தான் இந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்.

KaathuVaakula Rendu Kadhal Movie FC Rating – 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்