‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் தமிழ் வரிகள் | Kaalathukkum Nee Venum Lyrics

0
Kaalathukkum Nee Venum Song Tamil Lyrics
Kaalathukkum Nee Venum Song Tamil Lyrics

‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் தமிழ் வரிகள்:

என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

நீ வந்த நெழல் தந்த
எதனாலோ ஒத்து கொண்டேன்
நீ பாக்கும் போதும் பேசும் போதும்
நெஞ்சில மின்னல் கண்டேன்
இனிமேல் என் வாழ்வே உன்னோடு
ஓ வருவேனே பின்னோடு

ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல
இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல
என்னோடு வா இப்பயே வா

உன் கூர சேல கூத்தாடும்
குங்குமத்தில் முங்கும்
ஓ தங்க தோடு பேசும் காதோரம்
ஓ வாழை மஞ்சள் தென்னைகள்
வாசல் பந்தல் ஆகும்
ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்
இணஞ்சு கொண்டாடும்

ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்

ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ
ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ

என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள்
கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்
நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ
தென்றல் ஆகும் தீயே
எனை மெல்ல கொல்லும் நோயே
என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே

ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்
கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்
உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும்
உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்
காலத்துக்கும் நீ வேணும்…

Kaalathukkum Nee Venum Lyrical Video

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்