விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘க/பெ ரணசிங்கம்’ OTT -ல் வெளியீடு!

0
Ka Pae Ranasingam movie release in OTT

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘க/பெ ரணசிங்கம்’ திரைப்படம் OTT-ல் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ka Pae Ranasingam movie release in OTT
Ka Pae Ranasingam movie release in OTT

அறிமுக இயக்குனர் பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் பிரதான பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார், முக்கிய பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். KJR ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல், சமீத்தில் வெளியான இப்படத்தின் பாடல் ஒன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஜீ ப்ளக்ஸ், இது திரையரங்குகள் பாணியில் காட்சிக்குக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையாகும்.

‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...