‘சந்திரமுகி 2’ படம் பற்றி ஜோதிகாவின் பதிவு:
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து சந்திரமுகி முதல் பாகத்தில் மிரட்டிய நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதுள்ளார். அவர் பகிர்ந்துள்ளதாவது, ” இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை அதனால் இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி.வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண