சூர்யாவின் 2D என்டர்டையின்மென்ட் தயாரிப்பில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.


JJ பெட்ரிக் இயக்கியுள்ள இப்படம் நேரடி வெளியீடாக அமேசான் பிரைமில் வரும் மே 29 – ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன்கள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பத்திரிக்கையாளர்களுக்கு இணையத்தின் வாயிலாக பேட்டியளித்த ஜோதிகா, இப்படம் மற்றும் பொது விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அதில் சில பதில்கள் இதோ, ” அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்விக்கு, அரசியலுக்கு வராமல் நிறையவே நல்லது பண்ணலாம். கண்டிப்பாக தேர்தலில் எல்லாம் போட்டியிடமாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்புணர்வு இருக்க வேண்டும், அரசாங்கத்தை நம்பி மட்டுமே இருக்கக் கூடாது. ஒரு ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.


எதற்கு புது இயக்குனர்களுடனே பயணம் செய்கிறீர்கள்? புதிதாக வருபவர்கள் துணிந்து சில முயற்சிகளை செய்வார்கள், மேலும் சொல்ல வருவதை நேரடியாக சொல்லி விடுவார்கள். அவர்களின் சிந்தனை ஓட்டம் மிகவும் புதியது, மேலும் அவர்களுடன் பணிபுரிவது மிகவும் சவாலானது. என்னைப் பொறுத்தவரை திரைக்கதை எப்பவும் புதுமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டுமென விரும்புவேன். ஒரு படத்தை அனைவருமே விரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். படம் பார்க்கும் ரசிகர்கள் யாருமே போராக நினைக்கக் கூடாது. அது டாக்குமென்ட்ரி மாதிரி இருக்கக் கூடாது” என ஜோதிகா கூறியுள்ளார்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…