‘ஜோதி’ திரைப்பட விமர்சனம் | Jothi Movie Review and Rating

0
Jothi Movie Review and Rating
Jothi Movie Review and Rating

‘ஜோதி’ திரைப்பட விமர்சனம் | Jothi Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: வெற்றி, ஷீலா ராஜ்குமார், கிருஷ்ணா குரூப், இளங்கோ குமாரவேல், மைம் கோபி மற்றும் பலர்.

இசை: ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்

ஒளிப்பதிவு: செசிஜெயா

எடிட்டிங்: சத்யமூர்த்தி

தயாரிப்பு: SP ராஜசேதுபதி

இயக்கம்: AV கிருஷ்ணா பரமாத்மா.

கதைச்சுருக்கம்:

ஊரில் அடுத்தடுத்து கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகள், இப்படியிருக்க ஒருக்கட்டதில் போலீஸாக இருக்கும் கதாநாயகனின் எதிர் வீட்டில் இருந்த கர்ப்பிணி பெண்ணின் மர்ம நபர் ஒருவன் வயிற்றை கிழித்து குழந்தையை திருடி செல்கிறான். இதன்பிறகு இப்படியே விட்டால் இன்னும் மோசமாகி விடும் நாமே களத்தில் இறங்குவோம் என விசாரணையை துவன்குகிராது கதாநாயகன். இறுதியாக யார் இவ்வளவு கொடூர செயல்களை செய்வது? ஏன் செய்தான்? என்கிற விஷயமே படத்தின் கதைச்சுருக்கம்.

Jothi Movie Review and Rating
Jothi Movie Review and Rating

FC விமர்சனம்:

உண்மைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஜோதி படம் எப்படி இருக்கு என்பதை விமர்சனத்திற்கும் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் வெற்றி, ஷீலா ராஜ்குமார், மைம் கோபி, கிருஷ்ணா குரூப் உள்ளிட்ட முக்கிய பாத்திரங்கள் அனைவருமே எடுத்த பாத்திரங்களை குறையில்லாமல் செய்துள்ளனர். நாயகன் வெற்றி எல்லா படத்திலும் ஒரே மாதிரியான ரியாக்ஷனுடனே நடிப்பது போல ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை ஹர்ஷவர்தன் இசையில் கிளைமாக்ஸில் வரும் அந்த யேசுதாஸ் பாடிய பாடல் உண்மையில் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பின்னணி இசை இந்த கதைக்கு ஏற்றவாறு இருந்தாலும் ஓகே ரகம்தான். இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருந்தாலும், திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கலாம். அதில் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர்.

Jothi Movie Review and Rating
Jothi Movie Review and Rating

இப்படத்தின் முதல் பாதி யார் அந்த மர்ம நபர்? என்கிற தேடலில் செல்வதால் சுவாரஸ்யமாக செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதி அப்படியே நேர் எதிர்! எதோ படம் ஓடுது என்கிற பீலிங் தான், டுவிஸ்ட், கதாப்பாத்திரங்களை வலுக்கட்டாயமாக திணித்தது போல ஓர் உணர்வு. அடுத்தடுத்து குழந்தைகள் கடத்தப்பட்டாலும், படத்தின் நாயகன் தான் எடுத்துக் கொண்ட அந்த கேஸில் மட்டும்தான் செல்கிறாரே தவிர மற்றதை கண்டுக் கொள்ளவில்லை. எல்லாத்தையும் விட வில்லன் கதாப்பாத்திரத்தை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம், கதைக்கான பலமே வில்லன்தான் ஆனால் அந்தளவிற்கு பாதிப்பை நமக்கு கொடுக்கவில்லை. இறுதியாக ஜோதி படம் எப்படி என்றால், எடுத்துக்கொண்ட கதை, கருத்து பாராட்டக்கூடிய ஒன்றாக இருந்தாலும், திரைக்கதையில் கோட்டை விட்டதால் ஜோதி பிரகாசமாக எரியவில்லை. ஓகே ரகம்தான் பா…

Jothi Movie Film Crazy Media Rating: 3 /5

 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்