13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 20 -வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து, முதலில் பேட்டிங்கை துவங்கியது. 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து, 194 ரன்களை பெங்களுரு அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி ரன்கள் மட்டுமே எடுக்க, 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது.


இது ஒருபுறம் இருக்க, இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பந்து ஹர்திக் பாண்ட்யாவின் தலையில் படமால் நூலிழையில் சென்றது. இப்போட்டியின் 19-வது ஓவரை ஜோப்ரா ஆர்ச்சர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஹர்திக் பாண்ட்யா எதிர்கொண்டார். அப்போது பந்து ஹர்திக் பாண்ட்யாவின் தலையை நோக்கி வேகமாக வந்தது. இதனைப் பார்த்த பாண்ட்யா உடனே தலையை கீழே குனிந்து கொண்டார். இதனால் நூலிழையில் அவரது தலையில் படாமல் பந்து சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...