‘ஜோ ஜோ ஜோ’ பாடல் வரிகள்| Jo Jo Song Lyrics in Tamil – Aranmanai 4

5
Jo Jo Song Lyrics in Tamil
Jo Jo Song Lyrics in Tamil

‘ஜோ ஜோ ஜோ’ பாடல் வரிகள்| Jo Jo Song Lyrics

தமிழ் வரிகள்:

பெண் : நித்தம் புது தேசம் அழைக்கவே
தங்கமே கண்ணுறங்கு
புத்தம் புது நேசம் தலைக்கவே
வைரமே கண்ணுறங்கு…

பெண் : குத்தங்குறை இல்லா என்னுறவே
ரத்தினமே கண் உறங்கு
பத்தமடை பாயில் பொன் எழிலே
பத்திரமாய் கண் உறங்கு…

பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ… ஜோ ஜோ ஜோ…

பெண் : அந்த ஆதவன் தந்த நன்குடை நீயோ
நான் யார் என்று சொல்லும் ஓர் நிழல் நீயோ
என் வாழ்வெனும் வேரில் வான் மழை நீயோ
சிறு புன்னகை ஏந்திய பூஞ்சிலை நீயோ…

பெண் : அந்த வானம் இருக்கும் வரையிலே
உன் வேலியா நான் இருப்பேன்
உன்ன அள்ளும் பகலும் காத்திடவே
கருமாரியா மாறி நிப்பேன்…

பெண் : உன் சிரிப்பினிலே மெய் மறப்பேனே
சொர்ணமே என் சொர்ணமே
உன் கண்ணீரை தினம் துடைப்பேனே
சர்வமே என் சர்வமே…

பெண் : உன் உச்சிதனை முகர்ந்து
உனக்கெனவே இருப்பேன்
என் உயிர் அது போனாலும்
உன் அருகினில் நான் கிடப்பேன்…

பெண் : ஜோ ஜோ ஜோ மை விழியே
ஜோ ஜோ ஜோ மான் விழியே
ஜோ ஜோ ஜோ வான் மழையே
ஜோ ஜோ ஜோ மை விழியே…

பெண் : ஜோ ஜோ ஜோ மான் விழியே…
ஜோ ஜோ ஜோ வான் மழையே…

பெண் : பொன் எழிலே கண் உறங்கு…
கண் உறங்கு கண் உறங்கு…

பாடல் விவரம்:

திரைப்படம்: அரண்மனை 4

இசை: ஹிப் ஹாப் ஆதி

பாடியவர்கள்: மீனாட்சி இளையராஜா

பாடலாசியர்: யுகபாரதி.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…