Jayam Ravi’s Bhoomi Movie Release in OTT?
ஜெயம் ரவியின் 25-வது படமான பூமி திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ரோமியோ ஜூலியட், போகன் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துவரும் திரைப்படம், பூமி. ஹோம் மூவிமேக்கர்ஸ், பட நிறுவனம் சார்பில், சுஜாதா தயாரித்துள்ள இப்படத்தில், நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
⮕ நாளை ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை


கடந்த, மே மாதமே வெளியிடவிருந்த இப்படம், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. இந்நிலையில், தற்போது நிலவி வரும் சூழலை கருத்தில் கொண்டு, இப்படத்தை நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டி இமான் இசையைமைத்துள்ள இப்படத்தின், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
⮕ Amala Paul Latest Stunning Stills
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...