ஜெயம் ரவியின் ‘அகிலன்’ ரிலீஸ் எப்போது?: பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள திரைப்படம் அகிலன். ‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

படவேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசிற்கு தயாராகவுள்ள இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ, வரும் டிசம்பர் 23ஆம் தேதி கிறிஸ்மஸ் விடுமுறையில் வெளியாகவுள்ளது. கூடுதலாக, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE