‘ஜவான்’ திரைப்பட விமர்சனம் | Jawan Movie Review & Rating

0
Jawan Movie Review & Rating
Jawan Movie Review & Rating

‘ஜவான்’ திரைப்பட விமர்சனம் | Jawan Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோனே, யோகி பாபு மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: G.K.விஸ்ணு

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: Red Chillies Entertainment

இயக்கம்: அட்லி.

Jawan Movie Review & Rating
Jawan Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

படத்தின் துவக்கமே ஹீரோவும், அவரது குழுவும் சேர்ந்து ஒரு ரயிலை கடத்தி, தாங்கள் கேட்கும் ஒரு விஷயத்தை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்று டிமான்ட் வைக்கின்றனர். இவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அரசு சார்பில் களமிறங்கிறார் நாயகி நயன்தாரா, இறுதியாக ஹீரோ ஏன் ரயிலை கடத்தினார்? இதன்மூலம் அவர் சந்திக்கும், ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? கடைசியாக ஹீரோ கேட்டது கிடைத்ததா? என்கிற சுவாரஸ்யமே மீதிக்கதை.

FC விமர்சனம்:

தமிழில் வரிசையாக பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வந்த இயக்குனர் அட்லி பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து கொடுத்துள்ள ‘ஜவான்’ திரைப்பட எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை நாயகன் ஷாருக்கான், படத்தை முழுவதுமாக தாங்கி பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு ஒரு எனர்ஜிடிக் பர்ஃபாமன்ஸ். இந்த வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி எடுத்துள்ளார்.

Jawan Movie Review & Rating
Jawan Movie Review & Rating

வில்லனாக வரும் விஜய் சேதுபதி, தனக்கே உரித்தான நக்கல் கலந்த வசனங்களில், முகபாவனைகளில் தனது வில்லத் தனத்தை காட்டி அசத்தியுள்ளார். நாயகிகளாக வரும் நயன்தாரா, தீபிகா படுகோனே, ப்ரியாமணி, சான்யா மல்ஹோத்ரா அனைவருமே கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். வழக்கம்போல அனிருத்தின் மாஸ் பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது (பாடல்கள் ஓகே ரகம்தான்). இப்படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே மிரட்டலாக அமைந்துள்ளது, அதேபோல் GK விஷ்ணுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்துமே டாப் கிளாஸ்.

விவசாயம், மருத்துவம் என சமூக அவலங்களை உள்நுழைத்து, அதை அழுத்தமான வசனங்களுடன் எமோஷனல் காட்சிகளாக கொண்டு வந்த அட்லியின் அந்த சாதுரியம் பாராட்டுக்குரியது. அதேநேரம், நாம் பல படங்களில் பார்த்து சலிதது, போதும்னு சொல்ற அதே அட்வைஸ், அதே கதைக்களம். திரைக்கதையை பொறுத்தவரை முதல் பாதியில் இருந்த அந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைவுதான். கமெர்ஷியல் படம் எனவே லாஜிக் சுத்தமாக எங்கும் தென்பட வில்லை. மொத்தமாக படம் எப்படி என்றால், சில நிமிடங்கள் வரும் லேகிங்கை பொறுத்து கொண்டால் கண்டிப்பாக நல்ல அக்ஷன் படத்தை பார்த்த அனுபவம் கண்டிப்பாக கிடைக்கும். அந்தளவிற்கான டெக்னிக்கல் விஷயத்தில் நேர்த்தியுடன் வந்துள்ளது இந்த ஜவான்.

Adults Note: ரத்தம் தெறிக்க கூடிய சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளது.

Jawan Movie Film Crazy Rating: 3.5 /5

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண