‘ஜவான்’ படத்தின் முதல் சிங்கிள் எப்போது? வெளியான அப்டேட் இதோ:
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். ஷாருக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வந்த இடம்’ என துவங்கும் இப்படத்தின் முதல் பாடல் இன்று(31.7.23) 12.50 PM மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 7ஆம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண