MGR ஸ்டைலில் விஜய்! மாஸ் காட்டும் ‘ஜன நாயகன்’ இரண்டாவது போஸ்டர்:
நடிகர் விஜய் – H.வினோத் கூட்டணியில் உருவாக்கி வரும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிட்டுள்ளனர். மேலும் இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று காலை வெளியான நிலையில், இரண்டாவது போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. கையில் சாட்டையுடன் MGR ஸ்டைலில் விஜய் இருக்கும் புகைப்படத்துடன் “நான் ஆணையிட்டால்” என்ற வசனம் இந்த இரண்டாவது போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஐந்தாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். KVN ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதோ அந்த போஸ்டர்…

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…