ரிலீஸிற்கு முன்பே சாதனை படைத்த ‘ஜெயிலர்’:
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் நாளை(ஆக.10) வெளியாகவுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரிலீஸிற்கு சில தினங்களுக்கு முன்பே களைகட்டிய இப்படத்தின் முன்பதிவின் மூலம் வசூல் வேட்டையாடி வருகிறது.


அந்த வகையில், தமிழகத்தில் முன்பதிவில் ரூ.8.5 கோடி வரை வசூலித்துள்ளது. கர்நாடகாவில் இப்படத்திற்காக 1097 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முதல் காட்சி 9 மணிக்கு துவங்கவுள்ளது. ஆனால் கர்நாடகாவில் அதிகாலை 6 மணிக்கே துவங்கவுள்ளதால் தமிழகத்திலிருந்து பலர் அங்குசென்று டிக்கெட் புக்கிங் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகாவில் ரூ.4.5 கோடி வரை முன்பதிவில் வசூல் செய்துள்ளது.
கூடுதலாக அமெரிக்காவில் மட்டும் வசூல் 4.21 கோடி வரை வசூலித்துள்ளது. மொத்தமாக உலகளவில் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ.20 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஜெயிலர் திரைப்படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண