ஜெயில் திரைப்பட விமர்சனம் | Jail Movie Review

0
Jail Movie Review
Jail Movie Review

ஜெயில் திரைப்பட விமர்சனம் 

படக்குழு:

நடிகர்கள்: ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார், பிரபாகர் மற்றும் பலர்.

இசை: ஜிவி பிரகாஷ்

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

எடிட்டிங்: ரேமன்ட் டெரிக் கிராஸ்டா

தயாரிப்பு: க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ்

இயக்கம்: வசந்த பாலன்.

Jail Movie Review
Jail Movie Review

கதைச்சுருக்கம்:

சென்னையில் சேரி பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நல்லது செய்கிறேன் என அவர்களை, அரசு சென்னை OMR காவேரி நகர் என்கிற ஹவுசிங் போர்ட் ஏரியாவிற்கு இடம்பெயர வைக்கின்றனர். நல்லதோ, கெட்டதோ இத்தனை நாட்கள் வாழ்வாதாரமாக இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றும் மக்களின் மனநிலை என்ன? அங்கு அவர்கள் படும் கஷ்டங்கள் என்ன? என்பதை சொல்ல வருகிறேன் என அதை தவிர வேறு விஷயங்களை சொல்லியிருப்பதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்.

Jail Movie Review
Jail Movie Review

FC விமர்சனம்:

நீண்ட போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த ஜெயில் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியுள்ளது, அப்படி பல தடைகளை கடந்து வெளியாகிய இப்படம் மக்களை கவர்ந்ததா? வாருங்கள் பார்ப்போம். முதலில் நடிகர்கள் இப்படத்தின் நாயகன்
ஜிவி பிரகாஷ் அவர் நடித்துள்ள மற்ற படங்களை காட்டிலும் நன்றாகவே நடித்துள்ளார். என்ன கமல்ஹாசனை தொடர்ந்து இவரும் உதட்டை கவ்வுவதில் தொடர்ந்து குறியாகவுள்ளார். குறிப்பாக இப்படத்தில் பெரிய ஹிட்டடித்த ‘காத்தோடு காத்தானேன்’ பாடலை இந்த முத்தக் காட்சிகளால் கெடுத்து வைத்துள்ளனர். இதுபோன்ற படங்களுக்கு அதெல்லாம் தேவையா? இயக்குனரே! நாயகியாக வரும் அபர்ணதி, ஜிவி பிரகாஷ் அம்மாவாக வரும் ராதிகா உள்ளிட்டோர் சிறப்பாக நடித்திருந்தாலும், அழுத்தமான கதாப்பாத்திரங்கள் இல்லாததால் ஒட்டாமல் செல்கின்றனர்.

Jail Movie Review
Jail Movie Review

படத்தின் பெரிய பலம் என்றால் கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு மட்டும்தான், அவ்வளவு நேர்த்தி ரசிக்க வைக்கிறது. மற்றபடி பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜிவி பிரகாஷின் பின்னணி இசை ஓகே ரகம்தான், பாடல்களிலும் கூட ‘காத்தோடு காத்தானேன்’ தவிர மற்ற பாடல்கள் பெரிதாக ஈர்ப்பு இல்லை. நல்ல கரு, இதை முறையாக கையாண்டிருந்தால் நிச்சயம் மக்களிடம் பாராட்டை பெற்றிருக்கும் படமாக வந்திருக்கும், ஆனால் நடந்ததோ வேறு, இயக்குனர் தான் எடுத்துக்கொண்ட களத்தை விட்டுவிட்டு பாதியில் களத்தை விட்டு வெளியே சென்று விளையாடி இருக்கிறார், சரி அதுவாவது சுவாரஸ்யமாக இருக்குதா? என்றால் சுத்தமாக இல்லை. அதேபோல் மேலே கூறியது போல ஜிவி பிரகாஷை தவிர வேறு எந்த கதாப்பாத்திரங்களும் விரிவாகவோ, அலுதமாகவோ இல்லாதது மேலும் மைனஸாக அமைந்துள்ளது. மேலும் இப்படத்தில் பல காட்சிகளும், காட்சியமைப்புகளும் பெரும் அபத்தமாக அமைந்துள்ளது. இப்படி படத்தில் குறைகள் தான் அதிகம், இயக்குனர் வசந்தபாலன், வெயில், அங்காடித் தெரு, அரவான் என கல்ட் படங்களை இயக்கியவரா! இப்படி அபத்தமாக ஒரு படத்தை எடுத்துள்ளார் என நினைக்கும் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. இறுதியாக ஜெயில் பார்ப்பவர்களுக்கு தான் தண்டனை…

  Jail Movie FC Rating: 2.5 /5  

 

மேலும் உங்களுக்கு:

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்பட விமர்சனம்

ஆன்டி இந்தியன் திரைப்பட விமர்சனம்

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்