‘ஜெய் பீம்’ திரைப்பட விமர்சனம் | Jai Bhim Movie Review

0

படக்குழு:

நடிகர்கள்: சூர்யா, லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர்.

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: S.R.கதிர்

எடிட்டிங்: பிலோமின் ராஜ்

தயாரிப்பு: 2D என்டர்டையிமென்ட் சூர்யா & ஜோதிகா

இயக்கம்: த.செ.ஞானவேல்

OTT: அமேசான் பிரைம்.

Jai Bhim Movie Review and Rating
Jai Bhim Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

பாம்பு பிடிக்கும், பாம்பு கடிக்கு வைத்தியம் பார்க்கும் தொழில் செய்து வாழ்ந்து வரும் இருளர் இன மக்கள். ஒரு சிறிய இடம், எந்தவித வசதியும், உரிமையும் இல்லாத வாழ்க்கை இருந்தும், சந்தோஷமாக கிடைத்ததை வைத்து வாழ்ந்து வருகின்றனர். மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தை. இங்கிருந்தால் சம்பாத்தியம் குறைவு என கூறி பக்கத்து ஊருக்கு செங்கல் சூளையில் வேலைக்கு செல்லும் மணிகண்டன். இந்நிலையில் நகை கொள்ளை சம்பவம் ஒன்றிற்கு சந்தேகத்தின் பெயரில் மணிகண்டனை தேட சூடுப்பிடிக்கிறது கதை.

மணிகண்டன் ஒருவரை பிடிக்க அவரது கர்ப்பிணி மனைவி, சொந்தம் என அனைவரையும் கைது செய்து, அடித்து சித்திரவதை செய்கிறது போலீஸ். ஒருக்கட்டதில் மணிகண்டன் பிடிபட அவருக்கும் சொல்லமுடியாத சித்திரவதை. இறுதியாக வழக்கு வழக்கறிஞர் சூர்யாவிடம் செல்கிறது. இறுதியாக உண்மையில் மணிகண்டன் குற்றவாளியா? அவருக்கு நடந்த கொடுமைகள் என்ன? என்பதை சூர்யா கண்டிபிடித்து வழக்கை வெற்றிகரமாக முடித்தாரா? என்பதே சுவாரஸ்யாமான மீதிக் கதை.

Jai Bhim Movie Review and Rating
Jai Bhim Movie Review and Rating

FC விமர்சனம்:

வழக்கறிஞராக இருந்து இதுபோன்ற பழங்குடியினர், நியாத்திற்காக போராடும் எளியவர்களுக்கு எந்தவித பணமும் பெற்றுக்கொள்ளாமல் வழக்கை எடுத்து அதில் வெற்றிக்கண்ட தற்போதைய நீதிபதி சந்துரு அவர்களின் வாழ்கையில் நடந்த ஒரு உண்மையான வழக்கை மையமாகக்கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பார்த்து முடித்துவிட்டு பார்த்தால் ஒரு எளிய மக்களுக்கு எவ்வளவு தூரம் கொடுமைகள் நடந்துள்ளது, அதில் எவ்வளவு பெரிய நல்ல மனிதர் இந்த சந்துரு என கண்கலங்கும். சூர்யா, உண்மையில் இப்படத்தை தைரியமாக தயாரிக்க ஒப்புக்கொண்டதுடன் மட்டுமில்லாமல் அதில் நடித்து படத்தை வலுப்பெற செய்தமைக்கு பெரிய பெரிய வாழ்த்துக்கள். எந்தவித கமெர்ஷியல் விஷயங்களும் சூர்யாவிற்கு இல்லை, அவர் கதையில் வரும் ஒரு முக்கியப் பாத்திரங்களில் ஒருவர் அவ்வளவுதான். அதை எந்தவித குறையுமில்லாமல் உணமைக்கே உண்டான அந்த மிடுக்குடன் படமுழுக்க வருகிறார்.

Jai Bhim Movie Review and Rating
Jai Bhim Movie Review and Rating

படத்தில் இருளர் இன மக்களாக வரும் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் அப்பப்பா என்ன நடிப்பு, உண்மையில் அந்த இன மக்களாகவே வாழ்ந்து கண்கலங்க வைத்துள்ளனர். நிச்சயம் உயரிய விருதுகள் அவர்களுக்கு கிடக்க வாய்ப்புள்ளது அந்தளவிற்கு நேர்த்தியான நடிப்பு. அதேபோல் அந்த இன மக்களாக வரும் அனைவருமே யதார்த்தத்தை அள்ளி தெளித்துள்ளனர். ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், இயக்குனர் தமிழ் என நடிப்பைப் பொறுத்தவரையில் எந்த குறையுமில்லை. ஷான் ரோல்டனின் இசை, S.R.கதிரின் ஒளிப்பதிவு படத்தை நம்முடன் மேலும் நெருக்கமைடைய வைத்துள்ளது.

படத்தில் குறைகள் என சொல்வதற்கு பெரிதாக எதுவுமில்லை. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம், நம் சமகாலத்தில் இதுபோன்ற கொடுமைகள் இன்னும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த கதையை தேர்வு செய்து, அதை எந்தவித மசாலா அம்சங்களையும் தூவாமல், உண்மைக்கு நெருக்கமாக உருவாக்கிய இயக்குனர் த.செ.ஞானவேல் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இறுதியாக ஜெய் பீம், குடும்பத்துடன் பார்க்க வேண்டிய தரமான, மனதை உலுக்கும் பாடம்.

     JAI BHIM MOVIE FC RATING: 4 /5    

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்