தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’.
இப்படத்தில் தனுஷ் உடன் மலையாள நடிகர்கள் ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ், கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷி காந்த் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸை எதிர்ப்பார்த்த போதுதான் வில்லனாக வந்தது கொரோனா. மே 1-ம் தேதி ஜகமே தந்திரம் திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு இப்படத்தின் அப்டேட் வெளியாவதாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூலை 28 -ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ
👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்
👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!
👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
👉 உடல் எடை குறைத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ராசி மந்த்ரா!
👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...