அடுத்தடுத்து 3 தெலுங்கு படங்கள்! கலக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்

0
Iswarya Menon has signed on for 3 consecutive Telugu films
Iswarya Menon has signed on for 3 consecutive Telugu films

அடுத்தடுத்து 3 தெலுங்கு படங்கள்! கலக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன்: தெலுங்கு, மலையாளத்தில் சில பாத்திரங்கள் செய்திருந்தாலும், தமிழ்படம் 2 மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து நான் சிரித்தால் படத்தில் ஹிப்ஹாப் ஆதி ஜோடியாக நடித்தார்.

Iswarya Menon has signed on for 3 consecutive Telugu films
Iswarya Menon has signed on for 3 consecutive Telugu films

இதைத் தொடர்ந்து எந்தவொரு பெரிய வாய்ப்புகளுமே இல்லாமல் இருந்த ஐஸ்வர்யாவிற்கு, தற்போது பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. அடுத்தடுத்து 3 தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஐஸ்வர்யா, அதில் ஒன்று தெலுங்கு நடிகர் நிகிலுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், வலிமை வில்லன் கார்த்திகேயாவிற்கு ஜோடியாக ஒரு படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதில் கார்த்திகேயாவுடன் இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. மூன்றாவதாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் ஒரு ரவுண்டு வர தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா மேனன்.

👉 ‘டாணாக்காரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்