‘விடுதலை 2’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடி இவரா?
வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விடுதலை பாகம் 1. உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது.
முதல் பாகத்தின் போதே பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதால், சிறிது கால படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதால், அவருடன் பயணிக்கும் விதமாக மஞ்சு வாரியர் கதாப்பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மஞ்சு வாரியர் ஏற்கனவே வெற்றி மாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண