‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் கதாநாயகி இவரா?
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற திரைப்படம் 7ஜி ரெயின்போ காலனி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. செல்வராகவன் எழுதி, இயக்கும் இப்படத்தில் முதல் பாகத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணாவே கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.


ஆனால் கதாநாயகி சோனியா அகர்வால் இல்லை என நாம் அறிந்ததே. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விருமன், மாவீரன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை அதிதி ஷங்கர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண