மீண்டும் அரசியலில் களமிறங்குகிறாரா ரஜினிகாந்த்?
ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ள ரஜினிகாந்த், தற்போது உத்திரப் பிரதேசத்தில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். நேற்று உ.பி. முதல்வர் யோகி, ஜார்க்கண்ட் ஆளுநர் சிபிஆர் என அடுத்தடுத்து பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினி, இன்று அகிலேஷ் யாதவை சந்தித்து பேசியுள்ளார். அரசியலில் இருந்து விலகிவிட்டேன் என கூறிய பின்பு, தற்போது அரசியல் தலைவர்களை சந்திப்பது ஏன்? நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கொடுக்க வாய்ப்பு இருக்கா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண