‘லால் சலாம்’ இந்த ஹிந்தி படத்தின் தழுவலா? வெளியான தகவல்:
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் ‘லால் சலாம்’. விஷ்ணு விஷால், விக்ராந்த் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டது.


இந்நிலையில் இப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘Kai Po Che’ படத்தின் தழுவலாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி கதாப்பாத்திரத்தை மட்டும் தனியாக இணைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது எந்தளவு உண்மை என்பது விரைவில் படக்குழு தரப்பில் அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண