ஷூட்டிங் துவங்கும் முன்பே இவ்வளவு பெரிய வியாபாரமா? ‘தளபதி 67’: விஜய் தற்போது நடித்துவரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜயுடன் ஜோடி சேர்கிறார் திரிஷா. மேலும், சஞ்சய் தத், விஷால், நிவின் பாலி என நாள்தோறும் அப்டேட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.160 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமையை ரூ.80 கோடிக்கு சன் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் ஷூட்டிங் துவங்காத, பெயர்கூட வைக்காத படத்திற்கு இவ்வளவு பெரிய வியாபாரமா! என வாய்பிளந்து நிற்கிறதாம் கோடம்பாக்கம்…
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE