கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில், இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு வெளியான படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. அடல்ட் காமெடி படமாக வெளியான இப்படம் வசூலில் ப்ளாக்பஸ்டராக மாறியது. இந்த தைரியத்தால் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இரண்டாம் குத்து என பெயரிட்டுள்ள இப்படத்தில், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமாரே நாயகனாக அறிமுகமாகியுலாளர். இவருடன் கரிஷ்மா, அக்ரித்தி, டேனியல் போப், ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பவர்களை முகம் சுளிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த முதல் பார்வையை முதல் பாகம் நாயகன் கௌதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...