‘இறுகப்பற்று’ திரைப்பட விமர்சனம் | Irugapatru Movie Review & Rating

1
Irugapatru Movie Review & Rating
Irugapatru Movie Review & Rating

‘இறுகப்பற்று’ திரைப்பட விமர்சனம் | Irugapatru Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்னதி, சானியா ஐயப்பன் மற்றும் பலர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: கோகுல் பினாய்

எடிட்டிங்: JV மணிகண்ட பாலாஜி

தயாரிப்பு: Potential Studios LLP

இயக்கம்: யுவராஜ் தயாளன்.

Irugapatru Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

திருமணமான மூன்று ஜோடிகள், இவர்களில் ஒவ்வொரு ஜோடிக்கும் ஏற்படும் வெவ்வேறு மன குழப்பங்கள், அதனால் ஏற்படும் சண்டைகள். இறுதியாக இதற்கான தீர்வை கண்டுப்பிடித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

தெனாலிராமன், எலி படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் இன்று(அக்.6) வெளியான ‘இறுகப்பற்று’ படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை, இப்படத்தில் மூன்று ஜோடிகளாக வரும் விக்ரம் பிரபு – ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் – அபர்னதி, ஸ்ரீ – சானியா ஐயப்பன் அனைவருமே யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் நடிகைகளின் நடிப்பு அபாரம். சரியான கதாப்பாத்திர தேர்வு.

Irugapatru Movie Review & Rating
Irugapatru Movie Review & Rating

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்தான். திருமணமாகி சில வருடங்களில் பொருளாதாரா பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இல்லர வாழ்கையில் ஏற்படும் மனகசப்புகளை மூன்று ஜோடிகளை வைத்து மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் யுவராஜ் தயாளன். வசனங்களுமே பல இடங்களில் கைத்தட்டல் பெறுகிறது, ரசிக்கும்படியும் அமைந்துள்ளது. காதல் திருமணமோ, பெற்றோர்கள் பார்த்து கட்டி வைக்கும் திருமணமோ அனைத்திலும் ஏற்படும் பிரச்சனைகள், விவாகரத்து வரை செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென்பதை பாடமாகவே கொடுத்துள்ளார் இயக்குனர்.

இந்த பாடம்தான் ஓவர்டோஸாக போய்விட்டதோ என படம் பார்க்கும் நமக்கு பிரச்சனை ஆகிறது. ஏனென்றால் கதையில் ஜோடிகளுக்குள் நடக்கும் விஷயங்களையே படமுழுக்க காண்பிப்பதால் மற்ற எந்தவொரு என்டர்டெய்ன்மென்ட் சார்ந்த அம்சங்களும் படத்தில் இல்லாமல் போகிறது. இதனால் நமக்கு ஏற்படும் சலிப்பை நம்மால் மறைக்க முடியவில்லை. மேலும், இதில் வரும் பிரச்சனைகள் அனைத்தும் யதார்த்த வாழ்கையில் நடக்கிறதா என்றாலும் கேள்விகுறி தான்! அப்படி கொஞ்சம் மிகப்படுத்தியே சில காட்சிகளை நகர்த்துகின்றனர். படத்தின் நீளத்தையாவது குறைத்து கிரிஸ்பாக கொடுத்திருக்கலாம், அதிலும் கோட்டைவிட்டுள்ளனர். மொத்தமாக பார்த்தால் திருமணம் ஆன & ஆகப்போகும் ஜோடிகள் வேண்டுமானால் சென்று முயற்சி செய்து பார்க்கலாம். மற்றபடி ரொம்பவே ஆவ்ரேஜ் படம்தாங்க…

Adult Warning: முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் குழந்தைகளுக்கு ஏற்ற கதைக்களம் இதுவல்ல…

Irugapatru Movie Film Crazy Rating: 3 /5

 

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0