ஜெயம் ரவியின் ‘இறைவன்’ பட ட்ரைலர் இந்த தேதியா?:
ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அஹமத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரைலர் எப்போது? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ட்ரைலர் வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி(நாளை) வெளியாகவுள்ளது.
ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண