‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் | Iraivan Movie Review & Rating

5
Iraivan Movie Review & Rating
Iraivan Movie Review & Rating

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் | Iraivan Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், விஜயலக்ஷ்மி மற்றும் பலர்.

இசை: யுவன் ஷங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஹரி K வேதாந்த்

எடிட்டிங்: J.V.மணிகண்ட பாலாஜி

தயாரிப்பு: Passion Studios

இயக்கம்: அகமத்.

Iraivan Movie Review & Rating
Iraivan Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

போலீஸாக வரும் ஹீரோ ஜெயம் ரவி, அவரது நண்பராக வரும் நரேன் இருவரும், தொடர்ந்து இளம்பெண்களை கொடூரமாக கொலை செய்யும் சைக்கோவை தேடும் பொறுப்பை ஏற்கின்றனர். அதில் எதிர்பாராத விதமாக நரேன் அந்த சைக்கோவால் கொள்ளப்பட, நிலைகுலைந்து போகிறார் ஜெயம் ரவி. பிடிபடிட்ட அந்த சைக்கோவோ ஒருக்கட்டத்தில் போலீஸிலிருந்து தப்பிக்கிறான். இதன்பிறகு மீண்டும் அவன் கொலைகள் செய்தானா? ஹீரோ அந்த சைக்கோவை பிடித்தாரா? (இடைவேளையில் இருக்கும் டுவிஸ்ட்) என்பதே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் இன்று(செப்.28) வெளியாகியுள்ள ‘இறைவன்’ திரைப்படம் எப்படி இருக்கு? என்பதை வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை ஹீரோ ஜெயம் ரவி முரட்டுத் தனமான போலீஸ் அதிகாரியாக படமுழுவதும் ரசிக்கும்படி செய்துள்ளார். படத்தின் ஒரே ஆறுதல் ஜெயம் ரவி தான் என்றால் மிகையாகாது. ஹீரோயின் நயன்தாரா பெரிதளவு ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை என்றாலும் அழகாகவே வந்து செல்கிறார். வில்லன்களாக வரும் ராகுல் போஸ், வினோத் கிஷன் இருவருமே மிரட்டியுள்ளனர். ஆனால் வினோத் கிஷன் நடிப்பு கொஞ்சம் தூக்கலாக(ஓவர் ஆக்டிங்காக) தெரிவதை தவிர்க்கவில்லை.

Iraivan Movie Review & Rating
Iraivan Movie Review & Rating

இவர்களை தவிர, நரேன், விஜய லக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி, அழகம் பெருமாள், சார்லி, பக்ஸ் அனைவருமே கொடுத்த பாத்திரத்தை நேர்த்தியாகவே செய்து கொடுதுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை என்றாலும், பின்னணி இசையில் கொஞ்சம் கருணை காட்டியுள்ளார். ஹரி K வேதாந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் குவாலிட்டியாக தெரிந்தாலும், படமுழுவதும் லைட்டிங்கே இல்லாமல் எடுத்தது போல் கொஞ்சம் டிம்மாகவே தெரிகிறது. J.V.மணிகண்ட பாலாஜியின் கட்ஸ் அருமை. இவர்களைவிட சவுண்ட் எஃபெக்ட்ஸ் டீமிற்கு தான் பெரிய வேலை அதை நன்றாகவே செய்து முடித்துள்ளனர்.

கதையை பொறுத்தவரை இடைவேளையில் வரும் ஒரு சின்ன டுவிஸ்ட் அது மட்டும்தான் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது. மற்றபடி மெதுவாக செல்லும் திரைக்கதையால் சுவாரஸ்யம், அடுத்து என்ன? என்கிற ஆவல் குறைந்து விடுகிறது. நிறைய கொலைகள் கொடூரமாக நடந்தாலும் நமக்குள் அந்த சைக்கோவை பார்த்து கொஞ்சம்கூட பயம் வரவில்லை. அதைவிட சைக்கோத்தனத்தை நியாயப்படுத்தும் படியான காட்சிகள் இருப்பது தான் நமக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. மொத்தமாக படம் என்றால், சைக்கோ திரில்லர் கதை செமையா இருக்கும் என எதிர்ப்பார்த்து சென்றால், ஏமாற்றமே மிச்சம். சுமார் ரகம் தாங்க…

Adult Warning: நிர்வாண காட்சிகள், கொடூர கொலைகள் நிறைய இருக்கிறது.

Iraivan Movie Film Crazy Rating: 2.5 /5

 

தவறவிடாதீர்!

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.