‘இந்தியன் 2’ படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல் நிலவரம் இதோ

0
Indian 2 Movie Pre-Booking Report
Indian 2 Movie Pre-Booking Report

‘இந்தியன் 2’ படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல் நிலவரம் இதோ:

கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், விவேக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேபோல் ட்ரைலரும் பெரிதாக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2 Movie Pre-Booking Report
Indian 2 Movie Pre-Booking Report

வரும் ஜூலை 12ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ள இப்படத்தின் ப்ரீ-புக்கிங் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் இதுவரை ப்ரீ-புக்கிங்கில் ரூ.50 லட்சம்($65K) வரை வசூலிதுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸிற்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் முதல் நாள் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடிக்குமா! என பொறுத்திருந்து பார்ப்போம்.

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0