பிரம்மாண்டத்தின் உச்சமா ‘இந்தியன் 2’? லேட்டஸ்ட் அப்டேட்:
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் திரை வரலாற்றில் பிரம்மாண்டத்தின் உச்சமாக இப்படம் உருவாக்கி வருகிறது. சமீபத்தில் இதுவரை எடுத்துள்ள காட்சிகளை பார்த்த கமல் மெய்சிலிர்த்து போயுள்ளாராம். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…