‘இந்தியன் 2‘ படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்: கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. லைகா ப்ரொடக்ஷன்ஸ் & ரெட் ஜெயன்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விவேக், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இன்னும் 15 நாட்களில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தனது தெலுங்கு படமான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிபிற்கு கிளம்பிவிட்டார் இயக்குனர் ஷங்கர்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…