இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருமானவரித்துறையினர் தொடர்ந்த வழக்கால் சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


இங்கிலாந்தில் உள்ள லிப்ரா என்கிற செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்ததற்காக ரூ.3.47 கோடி ஊதியம் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் அதற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் அவர் ஊதியமாக வாங்கிய 3 கோடியே 47 லட்சம் ரூபாயை அவர் தனது ஏ.ஆர்.ஆர் அறக்கட்டளைக்குச் செலுத்தி, வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர்.ரஹ்மான் மீது வருமானவரித்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...