‘இடியட்’ திரைப்பட விமர்சனம் | Idiot Tamil Movie Review and Rating

0
Idiot Tamil Movie Review and Rating
Idiot Tamil Movie Review and Rating

‘இடியட்’ திரைப்பட விமர்சனம் | Idiot Tamil Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: ‘மிர்ச்சி’ சிவா, நிக்கி கல்ராணி, ரெடின் கிங்க்ஸ்லி, ஆனந்த்ராஜ், ஊர்வசி மற்றும் பலர்.

இசை: விக்ரம் செல்வா 

ஒளிப்பதிவு: ராஜா பட்டாச்சார்ஜி

எடிட்டிங்: கிங்கே மாதவன்

தயாரிப்பு: ஸ்க்ரீன் சீன் என்டர்டைன்மென்ட் 

இயக்கம்: ராம் பாலா.

Idiot Tamil Movie Review and Rating
Idiot Tamil Movie Review and Rating

கதைக்களம்:

ஊருக்குள் வேலை வெட்டியே இல்லாமல் சுற்றித்திரியும் கதையின் நாயகன், அவரை விட ஒருபடி மேல் வெட்டியாக திரியும் நாயகனின் தந்தை, ஒருக்கட்டதில் நாயகன் விபத்தை சந்திக்க பயித்தியக்கார ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்படுகிறார். அங்கு நாயகி(டாக்டராக) அறிமுகமாக அப்புறம் என்ன காதல் தான். மறுபுறம் பணக்கார நாயகியை கடத்தி அவர் அப்பாவிடம் பணம் கேட்கும் திட்டத்துடன் திரியும் ஒரு கும்பல். இப்படி எந்த பக்கம் தான் கதை செல்கிறது என்பதை கூட ரசிகர்கள் கண்டுபிடித்துவிடக்கூடாது (உஷாராக) என மேற்கண்ட எல்லாம் கலந்துகட்டி உருவாகியுள்ளது தான் இந்த இடியட். (ரசிகர்கள் உண்மையில் பாவம் தான்…)

FC விமர்சனம்:

விஜய் டிவி லொள்ளுசபா, சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு 1,2 என ஹிட் கொடுத்த இயக்குனர் ராம் பாலாவின் அடுத்த காவியம் தான் இந்த இடியட். வாருங்கள் படம் எப்படி என்பதை பார்ப்போம். மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஊர்வசி, ஆனந்த் ராஜ், ரெடின் கிங்க்ஸ்லி, ரவி மரியா என இத்தனை பேர் இருந்தும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிப்பும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. ஏதோ காமெடி படம்தானே என்று டைரக்டர் சொல்லியதை ஒப்பித்துவிட்டு சென்றிருகிறார்கள் என நினைக்கிறன். 

Idiot Tamil Movie Review and Rating
Idiot Tamil Movie Review and Rating

மிர்ச்சி சிவா தனக்கு வரும் அந்த ஒரே டைப்பான நடிப்பு, மாடுலேஷன், சொல்லப்போனால் அவர் ஏற்கனவே நடித்த ஒருசில காட்சிகளுமே வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். காட்சிகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒட்டவுமில்லை, சுத்தமாக லாஜிக் என்பதே இல்லை(கேட்டால் காமெடி படம் என்று சொல்லி சண்டைக்கு வருவார்கள்). இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா இயக்குனரே… சரி, காமெடி தான் எப்படி இருக்கு என்றால், உங்களுக்கு உதாரணத்திற்கு ஒரு காமெடி வசனம் கொள்கிறேன். அதில் வரும் ஒரு கதாப்பாத்திரம் சொல்லும் “சுத்தம் சோறு போடும், சுகாதாரம் குழம்பு ஊத்தும், அடக்கம் ஆம்பலேட் போடும்” இது ஒன்றே போதும் என நினைக்கிறேன். மொத்தத்தில் படம் என்றால், முழுக்க முழுக்க ஒரு காமெடி படத்தை “Pin Drop” சைலன்ட்டாக மக்கள் பார்த்த ஒரே படம் இந்த இடியட் தான். (டைட்டிலேயே குறியீடு வைத்திருக்கிறார் இயக்குனர் நாம் தான் புரிந்து கொள்ளவில்லை)…

  Idiot Tamil Movie Rating: 2 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்